ஈரானில் மீண்டும் தாக்குதல்: 9 பேர் பலி!

0
4

ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உட்பட தாக்குதல்தாரிகள் என 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

ஈரானின் ஜஹேதானில் உள்ள நீதித்துறை கட்டடத்தின் மீது ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதிகள் திடீரென சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, ஜெய்ஷ் அல் -அதில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.