ஈரானின் அணுஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை முடக்கும் வகையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஈரான் – அமெரிக்கா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் வரும் 19ஆம் திகதி 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இதில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கையை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.இந்நிலையில் தான் ஈரானுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் விமானம் தாங்கும் போர்க்கப்பல்கள் ஈரான் அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ் ஹாரி ட்ரூமன் என்ற போர்க்கப்பலை மத்திய கிழக்கு பிராந்திய கடலில் நிலைநிறுத்தி உள்ளது. இது ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி அமைப்பு மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு அடுத்தப்படியாக யு.எஸ்.எஸ் .கார்ல் வின்சன் ஈரானையொட்டி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த போர்க்கப்பல் அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. பாரஷீக வளைகுடாவை நோக்கி விரைந்து பயணிக்கும் வகையில் யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் போர்க்கப்பல் தயாராக உள்ளது. ஏற்கனவே ஏமன் ஹவுதி மீது ட்ரூமன் போர்க்கப்பல் தாக்குதல்நடத்தியது. இதன் அடுத்தக்கட்டமாக யு.எஸ்.எஸ் .கார்ல் வின்சன் விமானம் தாங்கும் போர்க்கப்பல் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் இருந்து போர் விமானங்கள் எளிதாக பறந்து ஈரானை மின்னல் வேகத்தில் தாக்க முடியும். குறிப்பாக அணுசக்தி திட்டங்களுக்கான உள்கட்டமைப்புகளை நோக்கி குறிவைத்து அழிக்க முடியும். இதனால் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட வேண்டும்.
எதிர்வரும் 19ஆம் திகதி இத்தாலி தலைநகர் ரோமில் நடக்கும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும். என்பதை மறைமுகமாக கூறும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.