ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், பிரதமர் தினேஷ் குணவர்தனவை, இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 20 உயர் அதிகாரிகள் குழுவினர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று இரவு, இலங்கையை வந்தடைந்தனர்.
மூன்று நாள் பயணமாக, ஈரான் அரசாங்கத்திற்கு சொந்தமான ஐ.ஆர்.ஏ.என் 5 என்ற விசேட விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, அவர்களை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.
இந்த பயணத்தின் போது, ஈரான் வெளிவிவகார அமைச்சர், பிரதமரை சந்தித்துள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.