ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து குலசிங்கம் திலீபன் விலகினார்

0
98

முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக றிவித்துள்ளார்.
ஊடகங்களில் வெளியான குறித்த விடயம் தொடர்பில் நாம் அவரிடம் தொடர்புகொண்டு வினவியபோது கட்சியிலிருந்து வெளியேறியுள்ளதாகம் அவர் உறுதிப்படுத்தினார்.
இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்களுக்காக செவையாற்றியதாகவும் சில விடயங்கள் காரணமாக கட்சியிலிருந்த விலகுவதாகவும் அவர் டிமெலும் தெரிவித்தார்.
தமது விலகல் தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இக் கட்சியில் இருந்து தாம் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை எனவும் இது தமது தனிப்பட்ட முடிவு எனவும் அவர் குறிப்பிட்டார்.