ரஷ்யா-உக்ரைன் போரானது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவுள்ளன.
அவற்றின் ஆயுத விநியோகம் மற்றும் பொருளாதார உதவியால் 18 மாதங்களை தாண்டியும் போர் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் சமீப காலமாக இரு தரப்பினரும் அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்துகின்றனர்.
அதன்படி ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.இதனை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
முன்னதாக கிரீமியா அருகே உள்ள கருங்கடல் பகுதியில் உக்ரைனின் 8 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.