தமது கருத்துகள்இதலையீடுகள் அன்றி முன்னெடுக்கப்படும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் தற்போது செலன்ஸ்கீ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவும் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.’ஒரு சுதந்திர நாடாக நாங்கள் இல்லாமல் எந்த ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று செலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.