உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க ஜேர்மன் தீர்மானம்

0
24

ரஷ்ய – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களையும் ,பொருளாதார உதவியையும் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனுக்கு 3 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான  ஆயுத உதவியை வழங்குவதற்கு ஜேர்மன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஆயுத உதவியில் ஆளில்லா விமான தாக்குதல் , கவச உடைகள் போன்றவைகளும் உள்ளடங்கும்.

இதேவேளை பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான ஆளும் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த உதவி பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததையடுத்து தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.