கடந்த திங்கட்கிழமை ரஷ்யா, உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது மிக மோசமான ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஜி-7 அமைப்பு நாடுகளுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். நேற்றைய தினம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், உக்ரைனுக்கு நிதி, நீதி, இராணுவ, மனிதாபிமான, இராஜாங்க ஆதரவுகள் அனைத்தையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக ஜி-7 அமைப்பு நாடுகள் உறுதியளித்துள்ளன. இதேவேளை, உக்ரைனுக்கு இந்த நாடுகள் இணைந்து வான் பாதுகாப்புத் தொகுதியை உருவாக்குவதற்கு நிதி உதவியை வழங்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தேவைப்படும் வேளையில் உக்ரைனுக்கு வேண்டிய உதவிகளை செய்வதாக ஜி7 நாடுகள் உறுதியளித்துள்ளன. ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஜப்பான் பிரதமர், ரஷ்யாவின் அணுவாயுதத் தாக்குதல்கள் குறித்து உக்ரைன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.