அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கியைப் பாராட்டியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதி மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும்இ அவர் மிகவும் துணிச்சலான நபர் என்றும் கூறினார். இருப்பினும் டொனால்ட் ட்ரம்ப் சில நாட்களுக்கு முன் உக்ரைன் ஜனாதிபதியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்திருந்தார்.
பிரித்தானியா பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து எதிர்காலத்தில் தனது நாட்டிற்கு உக்ரேனிய கனிம வளங்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் ஜனாதிபதி செலென்ஸ்கி கையெழுத்திடுவார் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்