உக்ரைன் நாட்டின் கடந்த 2022ஆம் ஆண்டு மீது ரஷ்யா தொடுத்த போரானது 2ஆவது ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த சூழலில், உக்ரைனின் வான் பாதுகாப்பு பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக என்று கவலை தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு ரஷ்யா அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதன்படி, உக்ரைன் மீது ரஷ்யா 40 ரொக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. எனினும், அதில் 8 ரொக்கெட்டுகளை எதிர்கொண்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமான படை தெரிவித்துள்ளது.
இதேபோன்று, உக்ரைனிடம் உள்ள விரிவான மின்னணு போர் உபகரணங்களால், ரஷ்யாவின் தாக்குதலுக்கான 20 வான் வழி ஆயுதங்கள் இலக்கை அடையவில்லை என்றும் தெரிவித்தது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலில், தொலைதூர, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய, விமானம், விமானங்களை தாக்கி அழிக்க கூடிய ரொக்கெட்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 7ஆம் திகதி நடந்த தாக்குதலின்போது, 59 ரொக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், 18 ரொக்கெட்டுகளையே உக்ரைன் சுட்டு வீழ்த்த முடிந்தது. கடந்த டிசம்பர் 29ஆம் திகதியில் இருந்து இதுபோன்ற தாக்குதல் 4ஆவது முறையாக நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.