உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களில், அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கின்ற நிலையில் உக்ரைன் மீது நேற்று திடீர் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஒரே நேரத்தில் 120 ஏவுகணைகள், 90 ‘ட்ரோன்’கள் வீசப்பட்டுள்ளது.
தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான வொலைன், மைகொலைவ், ஜபோரிச்சியா, துறைமுக நகரமான ஒடேசா உள்ளிட்ட பகுதிகளில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலில், மைகொலைவ் நகரில் இருவரும், ஒடேசா பகுதியில் இருவரும் உயிரிழந்துடன் இரு குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.