உக்ரைன் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ரொக்கெட்களைப் பயன்படுத்தி, ரஸ்யா திடீர் தாக்குதலை இன்று காலை நடாத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுடன் ஒப்புடுகையில் இத் தாக்குதல், கடுமையாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை அண்டிய நகரங்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி கட்டமைப்புக்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஸ்யாவின் தாக்குதலை, உக்ரைன் ஜனாதிபதி கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.