உக்ரைன் மற்றும் ரஸ்யா இடையே நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் போரை, முடிவுக்குக் கொண்டு வர, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சிகளை எடுத்து வருகிறார்.உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதஜபதி ஜோ பைடனுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த ஜூலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்த மோடி, சுமார் 9 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அதைப்போன்றே கடந்த 23-ம் திகதி உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன்
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் நேற்று முன்தினம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசிய மோடி, உக்ரைன் போருக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது குறித்து எடுத்துரைத்தார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இந்தியப் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். இந்த நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடிவெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ரஷ்யா – உக்ரைன் போர்குறித்து புடினுடன் ஆலோசனை நடத்தினேன்.
அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவில் உக்ரைன் மற்றும் ரஸ்யாவிற்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.