மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் கல்லடி திருச்செந்தூர் ,கல்லடி வேலூர் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் நெல் மூடைகள் வழங்கப்பட்டது. குறித்த கிராமங்களில் செயல்படுகின்ற கிராம மாதர் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு முதல் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு ஒரு மூடை நெல் வீதம் வழங்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் தலைமையிலான மாவட்ட அரச அதிகாரிகளுடனான இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட நெல் இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டதுபிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஜிஎன் . ராஜன் ,முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் டி .மேகராஜ் , கல்லடிவேலூர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் டி .மயூரன் , மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம மாதர் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்