மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைக்குட்பட்ட, உணவகங்களின்
உரிமையாளர்களுக்கு இன்றைய தினம் விழிப்புணர்வு செயலமர்வொன்று நடாத்தப்பட்டது.
ஹோட்டல், விடுதிகள் மற்றும் உணவகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் உணவு பாதுகாப்பு நடை முறைமைகள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டன.
உணவகங்களை பதிவு செய்தல் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
சுகாதார நடைமுறைகளை மீறும், உணவகங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
செயலமர்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் பங்கேற்றனர்.