உண்மை, ஒளி, நன்மை மேலோங்கும் என்பதை தீபாவளி நினைவூட்டுகிறது – கனடிய பிரதமர்

0
211

‘உண்மை, ஒளி, நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது’ என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தின் மூலம் நடைபெற்ற மெய்நிகர் தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவரது செய்தி விபரம் வருமாறு:

‘உண்மை, ஒளி, நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது. அந்த நம்பிக்கையான செய்தியைக் கொண்டாடவும், இந்த முக்கியமான தீபாவளித் விழாவைக் குறிக்கவும், நான் இன்று மாலை ஒரு மெய்நிகர் கொண்டாட்டத்தில் சேர்ந்தேன். கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!’