உத்தரவை மீறி பயணித்த மகிழுந்தின் மீது துப்பாக்கிச் சூடு!

0
7
Shooting a gun in night

மாலபே – ஹோகந்தர பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி மகிழுந்தொன்றை மடக்கிபிடித்த காவல்துறையினர் அதில் பயணித்த இரு சந்தேக நபர்களைக் கேரள கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளனர்.
ஹோகந்தர – விஸ்கம் மாவத்தை பகுதியில் வீதி சோதனை கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வீதியூடாக பயணித்த மகிழுந்தொன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும் குறித்த மகிழுந்து நிறுத்தாமல் சென்றதால் அதன் சில்லுகளை இலக்கு வைத்து காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்திய நிலையில் அந்த மகிழுந்து மின்கம்பமொன்றில் மோதிய நிலையில் நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் அந்த மகிழுந்தைச் சோதனையிட்டபோது அதிலிருந்து ஒரு கிலோகிராம் 800 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் அதில் பயணித்த இருவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.அத்துடன், மேலதிக விசாரணையில் கைதான நபர்களில் ஒருவரின் வீட்டிலிருந்த மேலும் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.