உபாதையால் அவதிப்பட்டுவரும் அண்டி மறே விம்பிள்டன் போட்டியில் விளையாட ஆர்வம் !

0
67

உபாதையால் அவதிப்பட்டு வருகின்ற பிரித்தானியாவின் அண்டி மறே, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என சம்பியன் டென்னிஸ் வீரரான அண்டி மறே தெரிவித்துள்ளார். 

பிரித்தானியாவின் அண்டி மறே கடந்த புதனன்று அவுஸ்திரேலியாவின் ஜோர்டன் தொம்சனுக்கு எதிரான குயின்ஸ் டென்னிஸ் போட்டியில் விளையாடிருந்தார். இப்போட்டியின்போது முதுகுத் தண்டு உபாதையால் அவதிப்பட்டு போட்டியை தொடர முடியாது  விலகிக்கொள்ள நேரிட்டது.  

தற்‍போது 37 வயதாகும் அண்டி மறே, சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ‘முதல்நிலை’ வீரராக திகழ்ந்தவர் ஆவார். இவர், 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக்கில் 3 தங்கம் அடங்கலாக  4 பதக்கங்களை வென்றுள்ளார். இவ்வாறு  சர்வதேச டென்னிஸ் அரங்கில் புகழ்பெற்ற  வீரராக உள்ள மர்ரே, தனது டென்னிஸ் வாழ்க்கையை சிறப்பாக முடிப்பதற்கு உறுதி  எடுத்துள்ளார். 

இதன் காரணமாக அண்டி மறே,  தனது சொந்த மண்ணில் விளையாடப்படும் விம்பிள்டனில் தனது ரசிகர்களுக்காக சிறப்பாக விளையாடவுள்ளார். எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பமாகும் விம்பிள்டனில் தனது மூத்த சகோதரரான ஜேமி மறேவுடன்  ஆடவர் இரட்டையரில் களமிறங்க திட்டமிட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.