உயர்தரப் பரீட்சையில் மோசடிச் சம்பவங்கள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
230

நாட்டில் தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட வினாத்தாள் விநியோகம் மற்றும் நேரக் கணிப்பீடு என்பன புதிய தொழில்நுட்ப முறையின் கீழ், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வலய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேற்பார்வை நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.