துறைமுக நகர ஆணைக்குழுவின் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் நாளை (18) அறிவிக்கவுள்ளார்.
அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய தினங்களில் இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த வேறு எவரும் பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது.