புத்தளம் கருவலகஸ்வெவ தப்போவ வனப்பகுதியில் காட்டு யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்ப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த யானை ஒரு வயது வயது மதிக்கத்தக்கது என கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த, யானை உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக நிகவெரெட்டிய மிருக வைத்தியரினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.