பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கல்பனா வசித்து வந்தார். அவரது வீடு கடந்த 2 நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அயலவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர், அங்கு கல்பனா மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்பனாவுக்குச் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறித்த இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.