உரிய அனுமதிப்பத்திரமின்றி கடத்தல் – சாவகச்சேரியில் சம்பவம்!

0
24

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக லொறி ஒன்றில் 18 மாடுகளை ஏற்றிவந்த ஒருவர், சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு சாவகச்சேரிப் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த லொறியை சாவகச்சேரி நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போதே குறித்த மாடுகள் மீட்கப்பட்டன.