25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உருகும் எவரெஸ்ட் சிகரம்;

புவி வெப்பமயமாதலால் எவரஸ்ட் சிகரம் உருகி வருவதாக ஆய்வு தகவல் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உலகின் உயரிய சிகரங்களில் உயரம் குறைந்து வருவதும் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
முன்னதாக அண்டார்டிகாவில் ராட்சத மலை ஒன்று இரண்டாகப் பிளந்து தனியாக கடல் பரப்பின்மீது மிதந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தற்போது நேபாளத்தில் உள்ள உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் தற்போது அதிக வெப்பம் காரணமாக உயரம் குறைந்து வருவதாக ஆய்வு ஒன்று தகவல் அளித்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக எவரெஸ்ட் மலையின் தெற்கு பகுதியில் 150 அடி உயரம் குறைந்துள்ளதாக மைன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது. எவரெஸ்ட் மலையின் மேலடுக்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த பகுதி உருவானதைவிட 9 மடங்கு வேகமாக தற்போது குறைந்து வருகிறது.
மேலும் அதிகரித்து வரும் தொழிற்சாலை, வாகன புகை காரணமாக காற்று மாசு ஏற்பட்டு இதுபோன்ற இயற்கை அச்சுறுத்தல் உண்டாவது வாடிக்கையாகிவிட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் சவுத் கோல் எனப்படும் இப்பகுதி இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானி பால் மாயாஸ்கி எச்சரித்துள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் மழை மேலடுக்கு உயரம் கணிசமாக குறைவது இயற்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதீத வெப்பம் காரணமாக உருகும் இந்த மேல் படலம் தண்ணீராக மாறி மலை உச்சியிலிருந்து ஆறாக உருவாகி மலையின் கீழ் உள்ள கிராமங்களில் ஓடுகின்றன.
சமீப காலத்தில் இதுபோன்ற உருவாகியிருக்கும் ஆறுகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நேபாள கிராம மக்கள் கூறியுள்ளனர். சில சமயங்களில் இந்த ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு கிராமங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. மனிதர்களின் செயல்களால் இயற்கை தொடர்ந்து இதுபோன்ற பாதிப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles