உலகளாவிய ரீதியாக கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 66 கோடியை கடந்துள்ளது.
இதன்படி, கொவிட்-19 காரணமாக உலகளாவிய ரீதியாக 66 கோடியே 3 இலட்சத்து 86 ஆயிரத்து 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, கொவிட்-19 காரணமாக உலகளாவிய ரீதியாக 66 இலட்சத்து 81 ஆயிரத்து 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் கொவிட்-19 பரவல் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அந்த வைரஸானது 228 நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில். உருமாற்றமடைந்து கொவிட்-19 வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.