உலக உணவுத்திட்ட கலந்துரையாடல்

0
2

உலக உணவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல், இன்று, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில், உலக உணவுத் திட்டத்தினால், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வழங்கல் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பிலும், அதனை எதிர்காலத்தில் முன்னெடுப்பது தொடர்பிலும், வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், உலக உணவுத் திட்ட பிரதிநிதிகள், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், வவுனியா மற்றும் கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர்கள், துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள் என பலர் பங்கேற்றனர்.