24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலக சுற்றாடல் தினத்தையொட்டி, கிளிநொச்சியில் கலந்துரையாடல்!

உலக சுற்றாடல் தினத்தையொட்டி ‘பயனுறுதிமிக்க நிலப்பயன் பாட்டினூடாக நலம் நிறைந்த நாடு’ என்ற தொனிப்பொருளிலான விழ்ப்புணர்வு கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது உலக சுற்றாடல் தினம் மற்றும் தொனிப்பொருள் தொடர்பான விளக்கத்தை, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் எஸ்.சுபாசினி வழங்கினார்.காடுகளை பேணுவதன் மூலம் நிலவள முகாமைத்துவம் தொடர்பில் வன வளத்திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர்
எம்.எ.ஹகீம் நிகழ்த்தினார். தொடர்ந்து கிரிசாலிஸ் நிறுவனத்தின் விளக்கக் காட்சி காண்பிக்கப்பட்டது.

நிலவளக் குறைதலுக்குரிய காரணங்களும் தடுப்பு நடவடிக்கை சாத்தியங்களும், தொழில்நுட்ப உத்திகளும் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கிளையின் உதவிப்பணிப்பாளர் எம்.உமையாள் நிகழ்த்தினார்.
வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் மகேஷ் ஜல்தோட்ட, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், கிரிசாலிஸ் நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கிளையின் உதவிப்பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலாக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles