உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் குறித்து ஐசிசியின் அறிவிப்பு

0
108

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சீசன் (2023-2025) தொடர்பான அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இந்த தொடரின்  முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கும் நடப்பு சம்பியனான அவுஸ்திரேலியாவுக்கும் மோதவுள்ள நிலையில், அதன் இறுதிப் போட்டி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு லண்டன், லோரட்ஸில் இடம்பெறவுள்ளது.

அதன்படி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடருடன் 2023-25 ​ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பமாகும்.

2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 27 தொடர்களில் திட்டமிடப்பட்ட 68 போட்டிகள் நடைபெறவுள்ளன.

அந்த வகையில் இம்முறை WTC 2023-25 ​​தொடரில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவை ஒன்பது அணிகள் மோதவுள்ளன.

அதன்படி இந்த ஒன்பது அணிகளும் WTC 2023-25 ​​தொடரில் தலா ஆறு தொடர்களில் விளையாடும். அவற்றில் மூன்று உள்ளூரிலும் மற்றும் மூன்று வெளியூரிலும் இடம்பெறும்.

WTC 2023-25 ​​தொடரில் இலங்கை அணி, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடனான தொடர்களை உள்ளூரிலும், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடனான தொடர்களை வெளியூரிலும் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.