25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளில் ஷக்கிப் அல் ஹசன்

இந்த வருடம் நடைபெறவுள்ள சகல டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷின் சிரேஷ்ட சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் விளையாடுவார் என தலைமை தேர்வாளர் காஸி அஷ்ரவ் ஹொசெய்ன் உறுதி செய்துள்ளார்.

‘ஜூலை மாத இறுதியில் ஷக்கிப் அல் ஹஸனுடன் நாங்கள் கலந்துரையாடினோம். அவரது உடற்தகுதி குறித்து என்னிடம் பலர் பேசினர்’ என பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு முன்பதாக ஹொசெய்ன் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரடாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் ஆகஸ்ட் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள ஷக்கிப் அல் ஹசன் முக்கிய சகலதுறை வீரர் பாத்திரத்தில் விளையாடவுள்ளார்.

‘கிரிக்கெட் உலகில் திறமைவாய்ந்த சகலதுறை வீரர்களில் ஷக்கிப் ஒருவராவார். அதனை நான் தொடர்ந்து ஏற்றுக்கொண்டுவருகிறேன். அவரை ஒரு பந்துவீச்சாளராக மட்டும் கருதுவதற்கு என்னால் முடியாது’ எனறார் ஹொசெய்ன்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ தலைமையில் 16 வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த குழாத்தை பங்களாதேஷ் தேர்வுக் குழு பெயரிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, உலக டெஸ்ட் சம்பியின்ஷிப் அணிகள் நிலையில் பாகிஸ்தான் 22 புள்ளிகளைப் பெற்ற 36.66 சதவீத புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும் பங்களாதேஷ் 12 புள்ளிகளைப் பெற்ற 25.00 சதவீத புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும் இருக்கின்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles