31 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலக வரலாற்றில் பெரும் பணக்காரரான இலான் மஸ்க்!

அமெரிக்க தேர்தலுக்கு பின்னர் அவரது சொத்து மதிப்பு 29 இலட்சம் கோடியைக் கடந்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் அவர் உலக வரலாற்றிலேயே பெரும் பணக்காரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஸ்லா,, ஸ்பேக்ஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான இலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் காணப்படுகிறார்.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்குப் பிறகு அவரது சொத்து மதிப்பு இன்னும் உயர்ந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பிற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வந்த இலான் மஸ்க் ட்ரம்பின் பிரசாரத்துக்குப் பல ஆயிரம் கோடி நிதியையும் வழங்கினார்.இதன் மூலம் அவர் ட்ரம்பிற்கு மிகவும் நெருக்கமான நபராக மாறினார். தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் தனது தலைமையில் அமைய இருக்கும் புதிய அரசில் எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக இலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. இதனால் அவரது சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் மட்டும் இலான் மஸ்க்கின் சொத்து ரூ.2.19 இலட்சம் கோடி உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles