உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

0
17

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொழில்துறை பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கியினை  வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த  61 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், இந்த சட்டவிரோத துப்பாக்கியை தயாரித்த சந்தேக நபரும் கடந்த 03ஆம் திகதி பதியத்தலாவ பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.