உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது.பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது யாழ். பொது நூலகத்திற்கு பிரதமரால் நூல்களும் வழங்கப்பட்ன.
நிகழ்வில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் எனப் பலர் கலந்து கொண்டனர்.


