உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

0
316

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி வழங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் நிதியை ஒதுக்க அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானம் குறித்து திறைசேரி செயலாளர் தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்திருந்தார். இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட திகதிகளில் அஞ்சல் மூல வாக்குகளை ஆணைக்குழுவிற்கு வழங்காத காரணத்தினால் எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.