உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்களை மதிப்பிடப்பட்டுள்ள நிதியைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை அதிகரிப்பினைக் கருத்திற்கொண்டே 10 பில்லியன் ரூபா தேர்தல் செலவிற்காக மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.