உள்ளூர் முட்டைகளின் விலை குறைப்பு

0
206
Domestic Trade and Consumer Affairs Ministry enforcement officers conduct checks on prices of eggs at Pasar Pelabuhan Klang in Port Klang December 13, 2021. — KK SHAM/The Star

நாட்டில் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி மக்கள் ஒரு முட்டையை 40, 42 மற்றும் 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

“65 மற்றும் 70 ரூபாவாக அதிகரித்திருந்த முட்டையின் விலை வீழ்ச்சிக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம்” என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி பண்ணையில் இருந்து ஒரு வெள்ளை முட்டை 37 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை 38 ரூபாய்க்கும் விற்பனைச் செய்ய முடியும் என்றார்.

முட்டை உற்பத்தியும் கணிசமான அளவு அதிகரித்து வருவதாகவும், மாதத்திற்கு ஐந்து இலட்சம் முட்டைகள் உற்பத்தியாகி, இம்மாதம் 60 இலட்சம் அல்லது 65 இலட்சமாக உற்பத்தி அதிகரித்துள்ளதாக தலைவர் சரத் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டு முட்டைகளை மக்கள் தேவையான அளவு கொள்வனவு செய்ய முடியும் எனவும் எதிர்காலத்தில் முட்டையின் விலை மேலும் குறையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முட்டை உற்பத்தி அதிகரித்து வருவதாலும், நாட்டுக்குத் தேவையான முட்டை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாலும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, டிசம்பருக்கு பின்னரும் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.