ஊர்காவற்துறை தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ‘ட்ராகன் போட்’ போட்டியில் சாதனை

0
12

யாழ்;ப்பாணம் ஊர்காவற்துறை தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் ‘ட்ராகன் போட்’ சம்பியன்சிப் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.இலங்கை சீன நட்புறவு கிண்ண ட்ராகன் போட் சம்பியன்சிப் போட்டி கொழும்பு பத்தரமுல்லை தியவன்ன வாவியில் இடம்பெற்றது.

தேசிய ரீதியில் இடம்பெற்ற இப்போட்டியிர் இளையோர் பிரிவில் ஊர்காவற்துறை தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆண்கள் அணி முதலாம் இடத்தையும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்று மாவடத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அந்த வகையில் குறித்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், பொறுப்பாசிரியர், மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.