29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கை!

Transparency International நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.0 (அதிக ஊழல்) – 100 (ஊழலற்ற நாடு) எனும் அளவில் நாடுகளை மதிப்பீடு செய்து Transparency International நாடுகளை தரப்படுத்துகின்றது.இந்த பட்டியலில் 180 நாடுகள் தரப்படுத்தப்படுகின்றன.இந்த பட்டியலுக்கு அமைய, இலங்கை 2023 ஆம் ஆண்டு 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்தது.இலங்கையுடன் ஈக்வடோர் , இந்தோனேஷியா , மலாவி, பிலிப்பைன்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.ஊழலற்ற நாடாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, பின்லாந்து, நியூசிலாந்து, நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.சோமாலியா, வெனிசுலா, சிரியா, தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகியவை குறியீட்டில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.நீதித்துறை பலவீனப்படுத்தப்படல், அரச அதிகாரிகளிடம் பொறுப்புக்கூறல் குறைதல் என்பன ஊழல் அதிகரிக்க காரணமாகவுள்ளதாக Transparency International சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles