‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மூன்றாம் கட்ட இழப்பீடு

0
152

‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மூன்றாம் கட்ட இழப்பீடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பேரில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,  இதற்காக 781 மில்லியன்  ஒதுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்திற்கு 520 மில்லியன் ரூபாவும் கொழும்பு மாவட்டத்திற்கு 193 மில்லியன் ரூபாவும் களுத்துறை மாவட்டத்திற்கு 37 மில்லியன் ரூபாவும்  ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட இழப்பீட்டுத் தொகையில் 50 வீத தொகை, அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இழப்பீடு பெற தகுதியான மீனவர்களின் எண்ணிக்கை 3,056 ஆகும்.