29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எடப்பாடிபழனிச்சாமிக்கு எதிராக மூன்று பிரிவுகளில் வழக்கு

கடந்த 2021ல் தமிழக சட்டசபை தேர்தலில் வேட்புமனுவில் சொத்து விபரங்களை தவறாக குறிப்பிட்டதாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் சொத்து விபரங்களை வேட்புமனுவுடன் தாக்கல் செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமியும் வேட்புமனுவுடன் சொத்து விபரங்களை தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‛‛2021 சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு பிரமாண பத்திரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொத்து விபரங்களை தவறாக குறிப்பிட்டுள்ளார். அதாவது சொத்து விபரங்களை மறைத்துள்ளார்.

அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவற சட்டசத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம் புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

மேலும் இதுதொடர்பான விபரங்களை மே மாதம் 26ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் சேலம் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles