யார் ஆட்சிக்கு வந்தாலும் பாரதூர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால், மக்கள் பிரதிநிதிகள் அதனை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொருளியல் விஞ்ஞானத்திற்கு அமைய நிபுணர்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து தரப்பினருடைய ஆதரவுடன் செயற்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் செயற்பட்டு வருகின்றோம்.
நிலையியல் கட்டளை குழு இன்று கூடியமையை தொடர்ந்து மேலும் 3 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
அவை மிகவும் அவசியமானவையாகும்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆளும் எதிர்க்கட்சிகளின் தலைமையில் இந்த குழுக்களை சூழற்சி முறையில் கண்காணிப்பு குழுக்களை அமைத்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.
எதிர்கட்சியுடன் இணைந்து ஒரே சமூகமாக இணைந்து செயற்பட வேண்டும்.
மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து சாதகமான பதில்கள், ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியமான விடயமாகும். ஏனெனில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் பாரதூர விளைவுகளையே சந்திக்க நேரிடும். அதனை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.