எதிர்காலத்தில் மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்இ மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை இதுவரையில் கோரிக்கை விடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளைஇ நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி கிடைக்காத காரணத்தினால் அடுத்த வாரத்தின் பின்னர்இ மின் துண்டிப்பு 10 மணித்தியாலங்களாக நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.