சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும் போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர்.
ஆனால் நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்ததால் இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் ஆற்றிய கொள்கை உரையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.