எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி
வேட்பாளராக, ரணில் விக்ரமசிங்க!

0
137

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இந்தக் கூட்டம், ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கொழும்பில் இடம்பெற்றது.

இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன மற்றும் வஜிர அபேவர்தன உட்பட பலர் பங்கேற்றனர்.