எதிர்வரும் 05ஆம் திகதி முதல், ரயில் நேர அட்டவணையில் திருத்தம்

0
111

எதிர்வரும் 05ஆம் திகதி முதல், கட்டம் கட்டமாக ரயில் நேர அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் களனிவெளி மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக, ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஏனைய மார்க்கங்களின் ரயில் நேர அட்டவணையும் கட்டம் கட்டமாக திருத்தியமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது நிலவும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும், திணைக்களத்தில் காணப்படும் 8,000 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.