எதிர்வரும் 28ஆம் திகதி வானில் 05 கிரகங்கள் சங்கமிக்கும் அரிய நிகழ்வு

0
260

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய ஐந்து கிரகங்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு, எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஐந்து கிரகங்களும் வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தெரியும் எனவும், புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை மட்டும் தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடந்தாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அந்த நிகழ்வானது அதற்கு முன் தினம் மற்றும் அடுத்த நாளும் வானத்தில் தெரியக்கூடும் என கூறப்படுகிறது.