எத்தியோப்பாவில் துப்பாக்கி ஏந்திய நபர் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதில் 34 பேர் பலியாகினர்.
இதுகுறித்து எத்தியோப்பிய மனித உரிமை ஆணையம் தரப்பில், “ எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 34 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அச்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.கடந்த சில மாதங்களாக எத்தியோப்பியாவில் இம்மாதிரியான துப்பாக்கிச் சூடுகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது