28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எந்த நீதிமன்றத்திலும் விசாரணைகளை எதிர்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம்- நாமல் ராஜபக்ஷ எம்.பி

உலகில் எந்த நாட்டில் எமக்கு சொத்துக்கள் இருக்கின்றன என்பதை தேடிப்பார்த்து அந்தந்த நாடுகளிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யுமாறும் அதனை எதிர்கொள்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்காக முதலில் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாராளுமன்றத்தில் எமக்கு எதிராக கடந்த காலங்களில் பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

லம்போகினி தொடர்பில் கதைத்தனர். 18 பில்லியன் டொலர் தொடர்பில் கதைத்ததனர்.

மீண்டும் மீண்டும் அதே விடயங்களை பாராளுமன்றத்தில் கதைக்கின்றனர்.

டிஜிட்டல் பணம் தொடர்பில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார கருத்தொன்றை கூறினார். அது முற்றிலும் பொய்யான கருத்தாகும்.

அது தொடர்பிலான ஆதாரங்கள் இருக்குமாயின் வரப்பிரசாதங்களுக்கு உட்படாது சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு செல்லுங்கள் என்றே கூறுகின்றோம்.

நாங்கள் எந்த நீதிமன்றதத்திலும் விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம்.

மீண்டும் மீண்டும் 2015ஆம் ஆண்டு முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

துறைமுக நகர திட்டத்தினூடாக கையூட்டு பெற்றாதாக ஆரம்பத்தில் கூறினர். தற்போது வேறுவிதமாகக் கதைக்கின்றனர்.

இவ்வாறான பொய்களைக் கூறி சமூகத்தை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு இந்த சபையை உட்படுத்தாதீர்கள். எமக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களது ஆட்சியிலேயே விசாரணைகளை முன்னெடுத்தீர்கள்.

ஐந்து வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றினார்கள். அரசாங்கத்தின் பணத்தை வீணடித்தார்கள். நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன்றங்களே வழக்குகளிலிருந்து விடுவித்தனர் பின்னர் மீண்டும் அந்த விடயங்களை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.

நீங்கள் கூறுவதைப் போன்று எந்த நாட்டிலும் எமக்கு சொத்துக்கள் இருக்குமாயின் உலகில் எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்யுங்கள். அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

கடந்த 12 வருடங்களாக நான் எனது சொத்து விவரம் தொடர்பிலான தகவலை பாராளுமன்றத்துக்கு வழங்கி வருகின்றேன்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles