எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம் 

0
234
மயக்க மருந்து நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அனைத்து அவசர சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இரத்தினபுரியில் மாத்திரமன்றி ஹம்பாந்தோட்டை, மாத்தளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கான பிரதான வைத்தியசாலைகளில் எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையும் ஒன்றாகும். வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கி வந்த மயக்க மருந்து நிபுணர்கள் இருவரும் அண்மையில் வெளிநாடு சென்றதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.அவர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில் அந்த மருத்துவர்களுக்காக வேறொரு மயக்க மருந்து நிபுணர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். நிலைமையை கருத்திற் கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை சத்திரசிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வைத்தியசாலையின் பணிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இதனிடையே, தற்போது மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை செய்ய வழியில்லை என பிரதேச பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த மூன்று சிறுவர் வைத்திய நிபுணர்களும் இடம்பெயர்ந்ததையடுத்து, அண்மையில் எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது.இந்தநிலையிலேயே எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை குறித்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.