எம்.பிக்களுக்கு மற்றுமோர் ஆப்பு!!

0
10

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான காப்புறுதிக் காப்பீட்டு அனுகூலத்தை ரூபாய் 250>000  ஆக மட்டுப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்புறுதிக் காப்பீட்டை வழங்குவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த திட்டம்,  2025.10.19 ஆம் திகதி ஆரம்பிக்கின்ற காப்புறுதி ஆண்டிலிருந்து ஆரம்பமாகும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வருடமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய்  உயர்ந்தபட்ச காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் கூட்டுக் காப்புறுதி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு 2023.05.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய,கடந்த காலப்பகுதியில் குறித்த காப்புறுதிக் காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு வரவு -செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கின்ற போது   பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற ரூபாய் 1000,000  காப்புறுதிக்காப்பீட்டு எல்லையை ரூபாய் 250,000 – ஆகக் குறைப்பதற்கு ஜனாதிபதி   முன்மொழிந்துள்ளார்.  

அதற்கமைய, 2025.10.19 ஆம் திகதி ஆரம்பிக்கின்ற காப்புறுதி ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான காப்புறுதிக் காப்பீட்டு அனுகூலத்தை ரூபாய் 250,000  ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.