எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜூன் மாதம்!

0
14

இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு  உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு  உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் என்பவரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சாட்சியங்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த மனு எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.